தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு

கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு முதல் புகுமுக வகுப்பில் (P.U.C) பகுதி l தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டது. பின் இளங்கலை இளமறிவியல்/ இளம் வணிகவியல் மாணவர்களுக்குத் பகுதி l தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டது. 1984-85 ஆம் கல்வியாண்டில் சுய நிதிப் பிரிவில் 100 மாணவியருடன் இளம் வணிகவியல் துறையுடன் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தும் பாடத்திட்டத்தைக் கொண்டதாகவும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் திகழ்கிறது.

ஒவ்வொரு கல்வியாண்டும் மாணவர்கள் பயனுறும் வகையில் சிறப்பு விரிவுரைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மாணவியரின் நடிப்புத்திறனை மேம்படுத்துதற் பொருட்டு 2018-19-இல் நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019-20-இல் வாகை நாடக மன்றம் தொடங்கி மாணவியரிடையே நாடகப்போட்டி நடத்தப்பட்டு வந்தது. ஆளுநர் மாளிகையில் எங்கள் மாணவியர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வேலுநாச்சியார் நாடகத்தை நடித்துக்காட்டி ஆளுநரின் பாராட்டைப் பெற்றனர். 2019-20 ஆம் கல்வியாண்டில் மாணவியருக்குக் கவிதை எழுத பயிற்சியளிக்க கவிதைப் பாசறை தொடங்கப்பட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது. சிலம்பம் சான்றிதழ்ப் படிப்பு 2022-23-இல் தொடங்கப்பட்டு 84 மாணவிகள் சான்றிதழ் பெற்றனர்.

பிற கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு தமிழ்த் துறை சார்ந்த போட்டிகளில் கலந்துகொள்ள மாணவியரை ஊக்குவிப்பதால் எம் மாணவியர் பிற கல்லூரிகளிலிருந்து சுழற்கோப்பை, கேடயம், பரிசுச் சான்றிதழ், பரிசுத்தொகை என வெற்றிவாகை சூடி வருகின்றனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஆகிய நிறுவனங்களின் நிதி நல்கையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகையைப் பெற்றனர். தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்டத்தோடு இணைந்து ஒருநாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற பயிலரங்குகளும், ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்த்துறை நடத்ததும் மொழி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவியர் அரசுத் தேர்வு வாரியப் போட்டிகளில் தேர்ச்சி பெற்றுவருகின்றனர். ஊடகம், மொழிபெயர்ப்பு, இதழ்கள் எனப் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெறுகின்றனர்.