முதுகலைத் தமிழ்த் துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த் துறை 2022-23 கல்வியாண்டு தொடங்கப்பட்டது. தாய்மொழியைக் கற்றல் என்பது நமது ஆழ்மனக் கல்வியாக விளங்குவதனால் தாய்மொழியாம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதுகலைத் தமிழ்த் துறை தொடங்கப்பட்டது. தமிழ்க் கல்வியை நவீன உலகத்திற்கு ஏற்றவாறு அமைத்தல், செயல்முறைப் பயிற்சி அளித்தல், பல்துறை அணுகுமுறை கொண்டதாக அமைத்தலை நோக்கமாகக் கொண்டு முதுகலைத் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது.
கருத்தரங்கக் கட்டுரைகள் எழுதச் செய்தல், பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ளச் செய்தல், குழு விவாதங்களில் பங்கேற்கச் செய்தல், அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்கச் செய்தல், போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்தல் என மாணவர்களின் தனித்திறன்கள் வெளிக்கொணரப்படுகிறது.
கள ஆய்வுப் பணிக்காக (Internship) பள்ளிக்கூடங்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்குச் சென்று பயிற்சி பெறுவர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரியில் பொது நூலகமும் மின் நூலகமும் அமைந்துள்ளது. ஆசிரியப்பணி, தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி வாய்ப்பு, சுயவேலை வாய்ப்பு, பல் ஊடகத்துறையில் நிகழ்ச்சித் தொகுப்புப் பணி, செய்தித்தாள் மற்றும் இதழியல் துறையில் துணை ஆசிரிய மற்றும் பிழைத்திருத்தப் பணி, மொழிபெயர்ப்புப் பணி, செய்தி சேகரிக்கும் களப்பணி, தமிழ் ஆய்வு நிறுவனங்களில் உதவி ஆராய்ச்சிப் பணி, எனப் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன.